\
Youth gather at Jantar Mantar: Metro stations closed; high security
delhi cjp protestsani

போராட்ட அறிவிப்பால் பதற்றம்.. 32,000 பேர் குவிப்பு! டெல்லியில் அதிகரிக்கும் டென்சன்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
Published on: 
Summary

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகல் கோரிக்கையால், டெல்லியில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. CJP கட்சியின் போராட்ட அறிவிப்பால், பாதுகாப்பு பணிகளுக்காக 32,000 வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து மற்றும் மெட்ரோ சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இடம்பெற்றுள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், பல்வேறு முடிவுகள் தொடர்பாக 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR), புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இந்த ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தச் செய்தியைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. SIR உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மூன்று தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலுடனும் ஒருமித்த கருத்துடனும் எடுக்கப்பட்டதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Students Protests in Jharkhand CJPs Next Big Move
Jharkhand protestReuters

இதற்கிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் நாளை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி வழங்கவில்லை. உரிய அனுமதியின்றிப் போராட்டம் நடத்துவது சட்டவிரோதமானது எனக் காவல்துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அனுமதி கிடைக்காவிட்டாலும் போராட்டத்தை நடத்துவோம் என CJP-யைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருவதாகத் தெரிகிறது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Youth gather at Jantar Mantar: Metro stations closed; high security
CEC அதிகாரம் யாருக்கு? ஞானேஷ் குமார் சர்ச்சைக்கு 30 ஆண்டுகள் பழைய FLASHBACK!

போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் பாதுகாப்புப் பணிகளுக்காக நாடு முழுவதிலுமிருந்து சுமார் 22,000 துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பாதுகாப்புப் பணிகளுக்காகப் படையினர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதவிர, டெல்லி காவல்துறையைச் சேர்ந்த சுமார் 10,000 வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லிப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

போராட்டத்தை முன்னிட்டு, அக்டோபர் 11ஆம் தேதி காலை வரை டெல்லிக்குள் வாகனங்கள் நுழைவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருந்துகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் நுழைவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

CJP to Launch Second Phase of Protest Soon
Abhijit DipkeANI

இதேபோல், புதுடெல்லி மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு வரவிருந்த மெயில் மற்றும் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் இன்று பிற்பகல் 2 மணி முதல் அக்டோபர் 11ஆம் தேதி அதிகாலை வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்று இரவு 9 மணி முதல் அக்டோபர் 11ஆம் தேதி அதிகாலை வரை டெல்லியில் உள்ள 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படும் என டெல்லி மெட்ரோ ரயில் கழகம் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, டெல்லி அரசின் கீழ் இயங்கும் மதுபானக் கடைகள் இன்று மற்றும் நாளை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.டெல்லி நோக்கி ரயில்களில் பயணம் செய்யும் இளைஞர்கள், அண்டை மாநிலங்களில் இடையிலேயே இறக்கிவிடப்படுவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே CJP முன்னெடுத்த சிறிய அளவிலான போராட்டங்கள் நாடு முழுவதும் பரவி, போராட்டங்கள் தீவிரமடைந்ததன் தொடர்ச்சியாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருந்தார்.இந்தச் சூழலில், CJP மீண்டும் நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Youth gather at Jantar Mantar: Metro stations closed; high security
“தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்க” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com