காற்று மாசு: “உச்சநீதிமன்ற அறிவுரைகளை டெல்லி அரசு பின்பற்றும்” - அமைச்சர் உறுதி

டெல்லியில் காற்று மாசு பிரச்னை மோசமடைந்துவரும் நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை டெல்லி அரசு பின்பற்றி நடக்கும் என அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கோபால் ராய்
அமைச்சர் கோபால் ராய்pt web

டெல்லியில் காற்றுமாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன பெருக்கத்தால் ஏற்படும் புகையும் தொழிற்சாலைகள், பொதுப் போக்குவரத்தினால் ஏற்படும் புகையும் காற்று மாசை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் காற்றின் தரக்குறியீடு 400-க்கும் மேல் பதிவாகியுள்ளது.

டெல்லி காற்று மாசு
டெல்லி காற்று மாசுfile image

டெல்லி காற்றுமாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “அண்டை மாநிலங்களில் பயிர் கழிவுகளை எரிப்பதை உடனே நிறுத்தவேண்டும். புகை கோபுரங்களின் செயல்பாட்டை மீண்டும் தொடங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. பல பேருந்துகள் மாசு ஏற்படுத்தும் வகையில் இயங்குவதாக கூறி, டெல்லி அரசும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இதற்கிடையே, காற்று மாசு பிரச்னையை கருத்தில்கொண்டு, டெல்லி பள்ளிகளில் குளிர்கால விடுமுறை வரும் 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதிவரை முன்கூட்டியே அளிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், காற்று மாசை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம் என தெரிவித்தார்.

அமைச்சர் கோபால் ராய்
அதிகரிக்கும் காற்று மாசு... கட்டுக்குள் கொண்டுவர டெல்லி அரசின் புதிய முயற்சி!

மேலும் பேசிய அவர், “பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என எந்த கட்சியானாலும் சரி, அனைவரும் இதில் ஒத்துழைப்பு நல்கவேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை டெல்லி அரசு பின்பற்றி நடக்கும். டெல்லியில் புகை கோபுரங்களை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தி இருக்கும் உச்ச நீதிமன்றத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com