மாரடைப்பால் உயிரிழந்த கணவர்.. 24 மணிநேரத்தில் புது மனைவி செய்த அதிர்ச்சி செயல்!

டெல்லியில் கணவர் இறந்த ஒரு நாளுக்குள் அவரது மனைவியும் இறந்த சம்பவம், அங்குள்ள பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அபிஷேக் - அஞ்சலி
அபிஷேக் - அஞ்சலிட்விட்டர்

டெல்லியில் கணவர் இறந்த ஒரு நாளுக்குள் அவரது மனைவியும் இறந்த சம்பவம், அங்குள்ள பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

file image

டெல்லி காசியாபாத் நகரைச் சேர்ந்தவர் அபிஷேக் ஆலுவாலி (25). இவருடைய மனைவி அஞ்சலி. இவர்களுக்கு கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், புதுமணத் தம்பதிகளான இவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு நேற்று சென்றுள்ளனர். அப்போது, அபிஷேக்குக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், பயந்துபோன அஞ்சலி அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், சிகிச்சை பலனிறி அவர் இறந்துபோனார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பின்னர், அபிஷேக் உடல் அவரது வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அஞ்சலி மீளாமல் அழுதபடியே காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் திடீரென எழுந்து 7வது மாடியின் முகப்புப் பகுதிக்குச் சென்று கீழே குதித்துவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அங்கே சிகிச்சை பலனின்றி இன்று காலை அஞ்சலி உயிரிழந்துவிட்டார்.

கணவர் உயிரிழந்த 24 மணிநேரத்திற்குள் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com