ஜம்மு - காஷ்மீரைப் பிரிக்க சதி.. தடை செய்யப்பட்ட அமைப்பு.. பெண் பிரிவினைவாதிக்கு ஆயுள் தண்டனை!
2021-ஆம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக, ஆசியா அன்ட்ராபி மற்றும் அவரது கூட்டாளிகளான ஃபெஹ்மீதா, நஸ்ரின் ஆகியோரை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தியது.
”ஜம்மு - காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும்” என கடந்த ஜனவரி 14 அன்று தடைசெய்யப்பட்ட துக்தரன்-இ-மில்லத் (DeM)அமைப்பின் தலைவர் ஆசியா அன்ட்ராபி வலியுறுத்தி இருந்தார். அந்த அமைப்பு, சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் நகலைக் கோரியும், பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட அமைப்புகளின் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தது. இந்த வழக்கு, பாகிஸ்தானின் ஆதரவுடன் பயங்கரவாத அமைப்புகள் உட்பட, அந்த நாட்டிற்கு எதிராகப் போர் தொடுப்பது தொடர்பானது. 2021-ஆம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக, ஆசியா அன்ட்ராபி மற்றும் அவரது கூட்டாளிகளான ஃபெஹ்மீதா, நஸ்ரின் ஆகியோரை டெல்லி நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தியது.
குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை மறுத்ததுடன், உரிய விசாரணைக்கும் உத்தரவிடக் கோரி வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், இதுதொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அந்த அமைப்பைச் சேர்ந்த மூவர் இன்று குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
குற்றச் சதி மற்றும் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது தொடர்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழும் அவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்பேரில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA)கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதியும் துக்தரன்-இ-மில்லத் (DeM)அமைப்பின் தலைவருமான ஆசியா அன்ட்ராபிக்கு டெல்லியில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், இன்று ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகவும் கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் சட்டரீதியான விளைவுகளையும் எடுத்துக்காட்டுகிறது. துக்தரன்-இ-மில்லத் என்பது 1987-இல் நிறுவப்பட்ட, காஷ்மீரைத் தளமாகக் கொண்ட பெண்கள் மட்டுமே உள்ள ஓர் அமைப்பாகும். இதன் தலைவராக ஆசியா அன்ட்ராபி உள்ளார். இந்த அமைப்பு, 1967-ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ், 2004-இல் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. இதற்கிடையில், 2018ஆம் ஆண்டு DeM தலைவர் ஆசியா ஆன்ட்ராபி என்ஐஏவால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில், தேசிய புலனாய்வு முகமை (NIA)அவர் மீதும் அந்த அமைப்பு மீதும் வழக்குப் பதிவு செய்தது.

