எம்எல்ஏ பதவியிலிருந்து விலகியது ஏன்? - அஜித் பவார் விளக்கம்

எம்எல்ஏ பதவியிலிருந்து விலகியது ஏன்? - அஜித் பவார் விளக்கம்
எம்எல்ஏ பதவியிலிருந்து விலகியது ஏன்? - அஜித் பவார் விளக்கம்

தேசியவாத காங்கிரஸ் தலை‌வர் சரத் பவாரின் புகழுக்கு தன்னால் களங்கம் ஏற்படுவதால் எம்எல்ஏ பதவியிலிருந்து விலகியதாக அவரது நெருங்கிய உறவினரான அஜித் பவார் தெரிவித்துள்ளார். 

தனது உறவினர் என்பதால் சரத் பவாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அஜித் பவார், மகாராஷ்ட்ரா மாநில கூட்டுறவு வங்கி முறைகேட்டில் சரத் பவாருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்தார். இவ்விவகாரத்தில் தன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதால் தனது உறவினரான சரத் பவார் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக அஜித் பவார் தெரிவித்தார். 

எம்எல்ஏ பதவியிலிருந்து விலகிய உடன் சரத் பவாரை சந்திக்காதது ஏன் என்று ‌செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தனது பாராமதி தொகுதி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்கு முன்னுரிமை கொடுத்து அங்கு சென்றுவிட்டதாக கூறினார். 

சரத் பவாரின் சகோதரி மகனான அஜித் பவார், தனது ‌எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து அது தொடர்பான கடிதத்தை மாநில ஆளுநரிடம் கொடுத்துவிட்டார். சரத் பவாரை கலந்தாலோசிக்காமல் பதவி விலகும் முடிவை அஜித் பவார் எடுத்ததால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அஜித் பவார் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com