\
90% of Smokeless Tobacco Deaths Occur in 10 Countries
லான்செட் ஆய்வுAI

மெல்லும் புகையிலையின் மையப்புள்ளியாகத் தெற்காசியா.. இந்தியாவில் பாதிப்பு அதிகம்: லான்செட்

உலகளவில் மெல்லும் புகையிலையால் ஏற்படும் நோய்கள் மற்றும் உயிரிழப்புகளில் 90% இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளில் பதிவாகியுள்ளது.
Published on: 

உலக அளவில் மெல்லும் புகையிலையால் ஏற்படும் நோய்ச் சுமை மற்றும் உயிரிழப்புகளில் 90 சதவீதம் இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகளிலேயே பதிவாவதாக 'தி லான்செட் குளோபல் ஹெல்த்' இதழில் வெளியாகியுள்ள புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக தெற்காசிய பகுதியே மெல்லும் புகையிலை பயன்பாட்டின் முக்கிய மையப்புள்ளியாக விளங்குவதாக அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆரோக்கிய அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

லான்செட் ஆய்வு
லான்செட் ஆய்வுAI

கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் மெல்லும் புகையிலையைப் பயன்படுத்திய 24.1 கோடி பேரில், சுமார் 2.51 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இதில் தெற்காசியாவில் மட்டும் 2.1 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இது உலகளாவிய மொத்த உயிரிழப்பில் 84 சதவீதமாகும். தெற்காசியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 14.6 சதவீதம் பேர் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். 60 முதல் 64 வயதுடையவர்களிடையே இதன் பயன்பாடு உச்சத்தில் உள்ளது.

பல்வேறு புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், உலகளவில் மெல்லும் புகையிலை பயன்பாட்டின் விகிதம் பெரிய அளவில் மாறாமல் உள்ளது. இந்த மெல்லும் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் நோய் பாதிப்புகளில் பக்கவாதம், உதடு மற்றும் வாய்வழி புற்றுநோய்களே முதன்மையாகக் கண்டறியப்பட்டுள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களிடையே மெல்லும் புகையிலையால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் ஊனமுறும் பாதிப்புகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 10 நாடுகளிலேயே ஏற்படுகின்றன.

90% of Smokeless Tobacco Deaths Occur in 10 Countries
அதிக செல்போன் பயன்பாடு.. சிறார் உட்காரும் நிலையிலும் கவனம் தேவை.. மருத்துவர்களின் எச்சரிக்கை என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com