\
Kulgam attack
Kulgam attackANI

வீரர்கள் மீது தாக்குதல்.. CRPF எடுத்த அதிரடி முடிவு!

குண்டு துளைக்காத கவச உடைகள் அணிய வேண்டும்: சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு கட்டாய உத்தரவு
Published on: 
Summary

ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் கடுமையாக மாற்றப்பட்டுள்ளன. குண்டு துளைக்காத கவச உடைகள், தலைக்கவசங்கள் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் - M.மீரா

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு பணியில் இருக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களுக்கு புதிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

குல்காம் மாவட்டத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் ஜி.பி. சிங் கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் சென்றார்.

அங்கு மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

Kulgam Attack
Kulgam AttackANI

இதன் தொடர்ச்சியாக, பணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் கட்டாயம் குண்டு துளைக்காத கவச உடைகள் மற்றும் தலைக்கவசங்களை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் எந்த வீரரும் பணியில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்களின் பாதுகாப்புக்காக நடமாடும் குண்டு துளைக்காத பாதுகாப்பு அரண்களை அமைக்கவும், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

kulgam attack
kulgam attack ANI

அதேபோல், வீரர்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்காமல், சுற்றுப்புறங்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, பணியின்போது மொபைல் போன் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அவசரத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் பொறுப்பில் உள்ள அதிகாரியைத் தவிர, மற்ற வீரர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது என சிஆர்பிஎஃப் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Kulgam attack
புல்லட் ரயில் திட்டங்களில் புறக்கணிக்கப்படுகிறதா தமிழகம்?