சந்திரனின் தென்பகுதியை ஆய்வு செய்யவிருக்கும் சந்திரயான்-3க்கான CountDown தொடக்கம்!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 ஏவுவதற்கான கவுண்ட்டவுன் தற்போது தொடங்கியுள்ளது.
Chandrayaan-3
Chandrayaan-3Twitter

கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்தே சந்திரனை ஆய்வு செய்யும் பணியை இஸ்ரோ மேற்கொண்டாலும், இந்த சந்திரயான்-3 திட்டம், இஸ்ரோவின் மைல்கல் திட்டமாக பார்க்கப்படுகிறது. காரணம், சந்திரயான்-3 விண்கலமானது சந்திரனின் தென்பகுதியை ஆய்வு செய்யவிருக்கிறது. இதுவரை சந்திரனின் தென்பகுதி குறித்த ஆய்வுகள் குறைவாகவே இருந்துவரும் நிலையில், இந்த விண்கல பயணம் வெற்றிபெறும் பட்சத்தில் விண்வெளித்துறையில் மீண்டும் ஒரு மைல்கல் சாதனையை இஸ்ரோ நிகழ்த்தும்.

இப்படி பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட சந்திரயான்-3, விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் வியாழக்கிழமையான இன்று பிற்பகல் தொடங்கியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், இன்று பிற்பகல் 1.05 மணிக்கு 25.30 மணி நேர கவுன்ட் டவுனைத் தொடங்கப்பட்டுளது.

Chandrayaan-3
Chandrayaan-3

எல்விஎம்3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3யை நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணிக்கு விண்வெளி நிறுவனம் விண்ணில் செலுத்துகிறது. பணியை புதுப்பித்து, உந்துசக்தி நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏவுதலுக்கான பணி தயார்நிலை மதிப்பாய்வு ஏற்கெனவே நிறைவடைந்துள்ளது. விண்கலத்தை ஏவுவதற்கு வாரியமும் அங்கீகாரம் அளித்துள்ளது.

Chandrayaan-3
“சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும்” இஸ்ரோ தகவல்

மூன்றாவது நிலவுப் பயணம்!

இந்தியாவின் மூன்றாவது சந்திரப் பயணமாக இருக்கும் சந்திரயான்-3 தரையிறங்கும் தொகுதி (LM), உந்துவிசை தொகுதி (PM) மற்றும் கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி நிரூபிக்கும் நோக்கத்துடன் செயல்பட தயாராக உள்ளது என்கின்ரனர் விஞ்ஞானிகள்.

Chandrayaan-3
Chandrayaan-3

இஸ்ரோவின் கூற்றுப்படி, லேண்டர் ஒரு குறிப்பிட்ட சந்திர தளத்தில் மென்மையாக தரையிறங்கும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் ரோவரை நிலைநிறுத்துகிறது. இது அதன் இயக்கத்தின் போது சந்திர மேற்பரப்பில் உள்ள இடத்தில் இரசாயன பகுப்பாய்வு செய்யும். லேண்டர் மற்றும் ரோவரில் நிலவின் மேற்பரப்பில் சோதனைகளை மேற்கொள்ள அறிவியல் ரீதியான பேலோடுகள் உள்ளன.

Chandrayaan-3
சந்திரயான் 3: லேண்டர் மற்றும் ரோவரின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
Chandrayaan-3
Chandrayaan-3

இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் கடந்த வாரம் சந்திரயான்-3 இன் தரையிறக்கம் ஆகஸ்ட் 23-24 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார். “சரியான தேதியில் சந்திரயான் ஏவப்பட்டால், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் சந்திரனில் அது தரையிரங்கும் என நாங்கள் தயாராகிவிடும். சந்திரனில் எப்போது சூரிய உதயம் இருக்கிறதோ, அதைவைத்தே தரையிறங்கும் தேதி சரியாக தீர்மானிக்கப்படும். போலவே தரையிறங்கும் போதும், சூரிய ஒளி இருக்க வேண்டும். இப்போதைக்கு ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சந்திரயான் 3 தரையிறங்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார் அவர்.

இஸ்ரோ அதிகாரிகள் திருப்பதி வருகை!

இதற்கிடையே இன்று ஆந்திரப் பிரதேசத்தின் திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரன் கோவிலுக்கு இஸ்ரோ அதிகாரிகள் சென்றிருந்தனர். ராக்கெட் மற்றும் விண்கலத்தின் சிறிய மாதிரியை அதிகாரிகள் தங்களுடன் எடுத்துச் சென்று, திருப்பதியில் தரிசனம் செய்தனர். ஸ்ரீஹரிகோட்டாவில் செயற்கைக் கோள் ஏவப்படுவதற்கு முன் கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறுவது பழைய இஸ்ரோவின் பாரம்பரியம் என கூறப்படுகிறது.

-ஜோஷ்வா.கா

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com