“சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் ஏவப்படும்” இஸ்ரோ தகவல்

சந்திரயான்-3 விண்கலம் LVM MK 3 ராக்கெட்டில் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. திட்டமிட்டபடி ஜூலை 12 முதல் 19 ஆம் தேதிக்குள் ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Chandrayaan-3
Chandrayaan-3pt desk

நிலவிற்கு விண்கலத்தை அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் 3 அடுத்த மாதம் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தின் முக்கிய பகுதிகளான லேண்டெர், ரோவர் ஆகியவை இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு சோதனை நடத்தப்பட்டது.


Chandrayaan-3
Chandrayaan-3pt desk

அதன் தொடர்ச்சியாக சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட உள்ள ராக்கெட்டான எல்.வி.எம்.எம்.கே 3-ன் பாகங்கள் மே மாதம் இறுதி வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சந்திரயான் விண்கலத்தை ராக்கெட்டின் முன் பகுதியில் பொருத்துவதற்கான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அந்தப் பணிகள் நிறைவு பெற்று சந்திரயான் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்டமாக உந்துவிசை அடுக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இன்னும் 30 நாட்களுக்கும் குறைவாகவே கால அவகாசம் இருக்கும் நிலையில், ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com