மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி  

மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி  

மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி  
Published on

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி விகிதம் மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்திய பொருளாதாரத்தில் தற்போது மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பொருளாதாரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அத்துடன் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5 சதவிகிதமாக குறைந்தது என்று மத்திய அரசு தரவுகள் தெரிவித்தன.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் முக்கியமான 8 துறைகளின் வளர்ச்சி 0.5 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக்கத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன. இது கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்ததாகும். கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தத் துறைகளின் வளர்ச்சி 4.7 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இந்த ஆகஸ்ட் மாதத்தில் நிலக்கரி(-8.6%), கச்சா எண்ணெய்(-5.4%), இயற்கை எரிவாயு(-3.9%), சிமெண்ட்(-4.9%), மின்சாரம்(-2.9%) உள்ளிட்ட துறைகள் குறைந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

எனினும் உரங்கள் துறை(2.9%), எஃகு உற்பத்தி(5%) வளர்ச்சி கண்டுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 8முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலளவில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 5.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com