\
தியா மிர்சா - நிதேஷ் ரானே
தியா மிர்சா - நிதேஷ் ரானேvideo screenshot - ani

சர்ச்சையான தீபாவளி பரப்புரை.. நடிகையின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்! நீக்கப்பட்ட வீடியோ!

பட்டாசுகளை தவிர்த்து மாசில்லா தீபாவளி கொண்டாடவேண்டும் என்ற நடிகையின் பரப்புரைக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on: 
Summary

தீபாவளி விழிப்புணர்வு வீடியோவில் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் என நடிகை தியா மிர்சா கூறியதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மரபுகளை மதிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்த, மும்பை மாநகராட்சி அந்த வீடியோவை நீக்கியது.

மாசில்லா தீபாவளியைக் கொண்டாட வலியுறுத்தி நடிகை தியா மிர்சா வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தீபாவளி
தீபாவளிகோப்புப் புகைப்படம்

அந்த வீடியோவில், தீபாவளியின்போது பட்டாசுகளைத் தவிர்த்து, ஒலி மற்றும் காற்று மாசுபாட்டைக் குறைக்க வேண்டும் என நடிகை தியா மிர்சா கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித் சதாம், தங்களது மரபுகளும் கலாசாரமும் ஆழமாக வேரூன்றியவை என்றும், இதுபோன்ற அறிவுரைகள் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இச்சர்ச்சையை தொடர்ந்து, நடிகை தியா மிர்சாவின் வீடியோவை மும்பை மாநகராட்சி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மாநில அமைச்சர் நிதேஷ் ரானே, "தியா மிர்சா தீபாவளி பற்றி ட்வீட் செய்துள்ளார், ஆனால் அவர் ஈத், முகரம் அல்லது பக்ரீத் பண்டிகைகளின் போது இதுபோன்ற ஆலோசனைகளை ட்வீட் செய்வதோ அல்லது வழங்குவதோ இல்லை. அவர்கள் ஹோலி பற்றி மட்டுமே பேசுகிறார்கள். ரமலான் மற்றும் பக்ரீத் பற்றியும் பேச வேண்டும். அவரைப் போன்றவர்கள் சனாதன இந்து மதத்திற்கு எதிரானவர்கள். நான் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சருடன் விவாதித்து, எதிர்காலத்தில் இதுபோன்ற விஷயங்களைத் தடுப்பதில் கவனம் செலுத்துவேன்" என பேசியுள்ளார்.

தியா மிர்சா - நிதேஷ் ரானே
மேற்கு வங்கத்தில் தேவாலயம் மீது தாக்குதல்.. பாதிரியார்கள், பெண்கள் உள்ளிட்டோர் காயம்!