பாஜகவில் இணைந்த பிரியங்கா காந்தியின் நெருங்கிய ஆதரவாளர்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தியின் நெருங்கிய ஆதரவாளரான தஜிந்தர் சிங் பிட்டு பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
 பிரியாங்கா காந்தி
பிரியாங்கா காந்திமுகநூல்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தியின் நெருங்கிய ஆதரவாளரான தஜிந்தர் சிங் பிட்டு பாரதிய ஜனதாவில் இணைந்தார். இமாச்சல பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளரான தஜிந்தர் சிங் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

அதில் காங்கிரஸ் கட்சியுடனான 35 ஆண்டுகால பந்தத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் பாஜக பொதுச்செயலாளர் வினோத் தவ்டே முன்னிலையில் பாஜகவில் அவர் இணைந்தார். இதேபோல் 2 முறை ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பியான சண்டோக் சிங் சவுத்ரியின் மனைவி கரம்ஜித் கவுர் சவுத்ரியும் பாஜவில் இணைந்தார்.

 பிரியாங்கா காந்தி
”இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சக்திவாய்ந்த பெரிய மனிதர்கள் என்னை நீக்க கைகோர்ப்பு” - பிரதமர்

சண்டோக் சிங் சவுத்ரி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவின் போது உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சி தங்களுக்கான மரியாதையை கொடுக்கவில்லை என குற்றம்சாட்டிய கரம்ஜித் கவுர், பாஜகவில் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com