”இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சக்திவாய்ந்த பெரிய மனிதர்கள் என்னை நீக்க கைகோர்ப்பு” - பிரதமர்

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சக்திவாய்ந்த பெரிய மனிதர்கள் தம்மை ஆட்சியிலிருந்து நீக்க கைகோர்த்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிபுதிய தலைமுறை

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சக்திவாய்ந்த பெரிய மனிதர்கள் தம்மை ஆட்சியிலிருந்து நீக்க கைகோர்த்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜீன் 1 வரை 7 கட்டங்களாக நடைப்பெற இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் முதற் கட்டதேர்தல் தற்போது நிறைவடைந்த நிலையில், மற்ற மாநிலங்களில் பரப்புரையும் பொதுக்கூட்டமும் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.

மோடி
மோடி

அந்தவகையில், கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரா மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”பெண்கள் தங்கள் குடும்பத்தை காக்க போராடாவருகிறார்கள். தம்மை பதவியிலிருந்து நீக்க சக்திவாய்ந்த பெரிய மனிதர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி
HeadLines Today | ’ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர்’ - துரை வைகோ To எலான் மஸ்க் இந்தியா வருகை அப்டேட்

ஆனால் பெண் சக்தியின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்பு கவசத்துடனும்  மோடியால் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்ல முடிகிறது. இந்தியா கூட்டணிக்கு தற்போது தலைவர் யாரும் இல்லை. அந்த
கூட்டணிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை.
” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com