ராகுல் காந்தி தமிழகம் வருகை! ட்விட்டரில் கிளம்பிய ஆதரவும், எதிர்ப்பும்

ராகுல் காந்தி தமிழகம் வருகை! ட்விட்டரில் கிளம்பிய ஆதரவும், எதிர்ப்பும்
ராகுல் காந்தி தமிழகம் வருகை! ட்விட்டரில் கிளம்பிய ஆதரவும், எதிர்ப்பும்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் தமிழக வருகைக்கு ட்விட்டரில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டை பார்க்க காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ளார். மதுரை - அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை அவர் கண்டுகளித்தார். 

“தமிழ் மக்களிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். அதற்காக அவர்களுக்கு நன்றி. ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்தும் புரிந்து கொண்டேன். அந்த விளையாட்டு ஏன் இந்த அளவிற்கு கொண்டாடப்படுகிறது என்பதையும் அறிந்து கொண்டேன். காளைகளுக்கு எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக்கவில்லை என்பதை நேரில் வந்து பார்த்து தெரிந்து கொண்டேன்” என செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ராகுல் காந்தி தமிழக வருகையை ஒட்டி ட்விட்டரில் அவருக்கு எதிராகவும், ஆதரவாகவும் ட்வீட் செய்யப்பட்டு வருகின்றன. அவருக்கு ஆதாரவாக #VanakkamRahulGandhi என்ற ட்வீட்டும், எதிராக #Goback_Rahul என்ற ட்வீட்டும் ட்ரெண்டாகி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com