வைரல் புகைப்படம்:  ராகுல் காந்தியிடம் ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்கும் நெட்டிசன்கள்

வைரல் புகைப்படம்: ராகுல் காந்தியிடம் ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்கும் நெட்டிசன்கள்

வைரல் புகைப்படம்: ராகுல் காந்தியிடம் ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்கும் நெட்டிசன்கள்
Published on

இதுவோ தேர்தல் நேரம். அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி என ஐந்து இடங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக மாநில அளவிலான கட்சிகள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றன. அதே நேரத்தில் தேசிய கட்சிகளின் தலைவர்களும், மூத்த உறுப்பினர்களும் கொஞ்சம் ஓவர் டைமாக தேர்தல் பரப்புரை பணிகளை கவனித்து வருகின்றனர். அதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் ஒருவர். 

படு பிஸியாக தமிழகம், புதுச்சேரி, கேரளா என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கேரளாவுக்கு சென்றிருந்த அவர் அங்கிருந்த மீனவ நண்பர்களுடன் இணைந்து கடலில் நீச்சல் செய்தார். அது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. 

இந்த சூழலில் கடலில் நீச்சலடித்து முடித்த பிறகு ராகுல் காந்தி படகில் நிற்கும் ஒரு படம் தான் இப்போது வைரலாகி உள்ளது. உச்சி முதல் பாதம் வரை சொட்ட சொட்ட நனைந்த ராகுல் காந்தியின் படம்தான் அது. அதில் அவரது வயிற்றுப்பகுதியில் ‘6 பேக்’ இருப்பதுபோல இருக்கிறது. உடனடியாக அந்த படத்தை வைரல் செய்த நெட்டிசன்கள் ராகுலிடம்  ஃபிட்னெஸ் டிப்ஸ் கேட்டும் வருகின்றனர். 

அந்த ட்வீட்டுகளில் சில…

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com