Congress
Congressமுகநூல்

காங்கிரஸ் மக்களவை தேர்தல் அறிக்கை இன்று வெளியாகிறது

காங்கிரஸ் கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது.
Published on

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான காங்கிரஸ் குழு, மார்ச் முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரித்து முடித்தது. இந்நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Congress
CongressANI

இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தின்போது, ராகுல்காந்தியிடம் மக்கள் முன்வைத்த பல்வேறு முக்கிய பிரச்னைகளுக்கு கவனம் அளிக்கும் வகையில் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Congress
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் சோனியா காந்தி

மேலும், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள், தொழிலாளர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள், மாணவர்கள் என பல்வேறு பிரிவுகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com