கூட்டணியின் தலைவர் கார்கே? ஒருங்கிணைப்பாளர் பதவியை மறுத்த நிதிஷ்குமார்

இண்டியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'INDIA' கூட்டணி
'INDIA' கூட்டணி புதிய தலைமுறை

ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாடு முழுவதும் 28 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி INDIA கூட்டணியை அமைத்தது. இந்த கூட்டணிக் கட்சிகளின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த மாதத்தின் இறுதியில் நடைபெற்றது.

டெல்லி, பஞ்சாப், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி, காங்கிரஸ் - திரிணாமூல் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்தும், கூட்டணி குறித்தும் அதிருப்திகள் இருந்தது.

தேசிய தலைமை கூட்டணிக்கு தயாராக இருந்தாலும், மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கும் பிற கட்சிகளுக்கும் சுமூகமான சூழல் நிலவவில்லை.

இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கேவை மம்தா முன்மொழிய பல கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த, மல்லிகார்ஜூன கார்கே,

“முதலில் வெற்றி பெற வேண்டும். வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். யார் பிரதமர் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பிரதமரைப் பற்றி பேசி என்ன பயன். முதலில் வெற்றி பெற முயற்சிப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. காணொளி வாயிலாக கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் கூட்டத்தில் பங்குகொள்ளவில்லை. முன்னரே திட்டமிடப்பட்ட சில நிகழ்ச்சிகள் இருப்பதால் மெய்நிகர் கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியவில்லை என இருவரும் தெரிவித்துள்ளனர்

இக்கூட்டத்தில் கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி நிதிஷ்குமாரிடம் கேட்டபோது அனைத்துக் கட்சிகளும் உடன்பட்டால் மட்டுமே பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com