ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் பெறத் துடிக்கும் காங்கிரஸ் - வேகமெடுக்கும் சிபிஐ

ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் பெறத் துடிக்கும் காங்கிரஸ் - வேகமெடுக்கும் சிபிஐ
ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் பெறத் துடிக்கும் காங்கிரஸ் - வேகமெடுக்கும்  சிபிஐ

ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் குறித்து காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் குழு டெல்லியில் உள்ள கபில் சிபல் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்க வாய்ப்பு உள்ளது. 

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் குழு டெல்லியில் உள்ள கபில் சிபல் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் சிதம்பரத்தின் முன் ஜாமின் தொடர்பான வழக்கு விசாரணையை எடுத்துக்கூற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், சிதம்பரத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்க கூடாது என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கவிருக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com