viral image
viral imagex page

வாயில் சிக்கிக் கொண்ட மருந்துப் பாட்டில்; வலியால் துடியாய் துடித்த நாகப்பாம்பு! #ViralVideo

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாகப்பாம்பு ஒன்று, இருமல் மருந்து பாட்டிலை விழுங்கிய நிலையில் அது பத்திரமாக மீட்கப்பட்டது.
Published on

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாகப்பாம்பு ஒன்று, இருமல் மருந்து பாட்டிலை விழுங்கியுள்ளது. இது, அதன் தொண்டையில் சிக்கி சிரமப்பட்டது. இதையடுத்து, பாம்பு ஹெல்ப்லைனிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் பொதுச் செயலாளர் சுபேந்து மல்லிக் சம்பவ இடத்திகு விரைந்தார். அவர், தனது கொக்கி முனையால் நாகப்பாம்பின்கீழ் தாடையை மெதுவாக விரித்து பாட்டிலை எடுத்தார். பின்னர், பாம்பைப் பிடித்துச் சென்ற நகருக்கு வெளியே இருந்த காட்டில் கொண்டுபோய் விட்டார்.

இதுகுறித்து சுபேந்து மல்லிக், “கவனக்குறைவாக வீசப்பட்ட மருந்துப் பாட்டிலை அது இரையென எடுத்து உண்ண ஆரம்பித்திருக்கலாம். இதனால், அது தொண்டையில் சிக்கி அதற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: டெஸ்லா கார் திரையில் பிழை.. சுட்டிக்காட்டிய சீனச் சிறுமி.. பொறுப்புடன் பதிலளித்த எலான் மஸ்க்!

viral image
கர்நாடகா: கேம் டிவைஸ் ஆர்டர் செய்த பெண் - அமேசான் பார்சலில் வந்த பாம்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com