கர்நாடகா: கேம் டிவைஸ் ஆர்டர் செய்த பெண் - அமேசான் பார்சலில் வந்த பாம்பு!

பெங்களூரில் அமேசானில் கேம் டிவைஸ் ஆர்டர் செய்த பெண்ணுக்கு உயிருள்ள பாம்பு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பார்சலில் வந்த பாம்பு
பார்சலில் வந்த பாம்புpt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூருவை சேர்ந்த தான்வி என்ற பெண் அமேசன் மூலம் எக்ஸ் பாக்ஸ் கேமிங் டிவைஸ் ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த இரண்டாவது நாள் அமேசான் தளத்தில் இருந்து அந்த பெண்ணுக்கு எக்ஸ் பாக்ஸ் கேமிங் டிவைஸ் நன்கு பேக்கிங் செய்யப்பட்டு கூரியர் அனுப்பப்பட்டிருந்தது. இந்த பார்சல் இரவு சுமார் எட்டு மணி அளவில் டெலிவரி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதை பெற்றுக்கொண்ட அந்தப் பெண் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டினுள் சென்று பார்சலை பிரித்துள்ளார்.

பார்சலில் வந்த பாம்பு
பார்சலில் வந்த பாம்பு pt desk

அப்போது அதிலிருந்து ஒரு பாம்பு எட்டிப் பார்த்துள்ளது. அதைக் கண்டு அதிர்ந்து போன அந்தப் பெண் பார்சல்லை தூக்கி வீசிவிட்டு உடனடியாக அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு ஓடிவந்து பார்த்த போது. அந்த பாம்பு வெளியில் வர முடியாமல் பார்சலில் இருந்த ஸ்டிக்கர் பசையில் ஒட்டியபடி நெளிந்துக் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து தான்வி, இதை தனது செல்போனில் படம் பிடித்து தனக்கு நேர்ந்த கதையை எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.

பார்சலில் வந்த பாம்பு
காஞ்சிபுரம் | 6 மாதங்களாக வாடகை கட்டாத குடும்பம்.. ஆத்திரத்தில் உரிமையாளர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

இந்த வீடியோ பதிவை பார்த்து அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்கு வருந்துவதாகவும் மேலும் தேவையான உதவிகளை செய்வதாகவும் அமேசான் எக்ஸ் பக்கத்திலேயே அந்த பெண்ணுக்கு பதில் அளித்துள்ளது.

ஆனால் “அந்த பார்சலை பிரித்த போது எனது மனநிலை எப்படி இருந்திருக்கும், இரண்டு மணி நேரத்திற்கு மேல் என்னை மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளியது. இந்த விஷயத்தில் சட்ட ரீதியாக அணுகப்போகிறேன்” என அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com