சிஎம்எஸ் - 03 செயற்கைக் கோள், மோடி
சிஎம்எஸ் - 03 செயற்கைக் கோள், மோடிpt web

சிஎம்எஸ் - 03 செயற்கைக்கோள்., இஸ்ரோவின் புதிய சாதனை... பிரதமர் மோடி வாழ்த்து !

4 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தியதன் மூலம், விண்வெளித்துறையில் புதிய மைல்கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது
Published on
Summary

சிஎம்எஸ்-03 உடன் எல்விஎம்- 3 எம் 5 ராக்கெட் இன்று (நவம்பர் 2) மாலை 5.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட மிகப்பெரிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தியதன் மூலம், விண்வெளித்துறையில் புதிய மைல்கல்லை இஸ்ரோ எட்டியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் நேற்று மாலை 5.26 மணிக்கு சிஎம்எஸ் - 03 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு எல்விஎம் 3 - எம்5 ராக்கெட் புறப்பட்டது. சிறிது நேரத்தில் ராக்கெட் உரிய சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியது. 43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 18 ஆயிரம் கிலோ எடை வரை ஏந்திச்செல்லும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளதால் இது பாகுபலி ராக்கெட் எனப்படுகிறது. 4 ஆயிரத்து 410 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள் இந்தியாவிலிருந்து ஏவப்படுவது இதுவே முதல்முறை.

சிஎம்எஸ் - 03 செயற்கைக் கோள்
சிஎம்எஸ் - 03 செயற்கைக் கோள்x

எடை மிகுந்த செயற்கைக்கோளையும் தங்களால் ஏவ முடியும் என்பதை உலகிற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது நிரூபித்துள்ளனர். இதற்கு முன் எடை மிகுந்த செயற்கை கோள்கள் ஃப்ரெஞ்ச் கயானா நாட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து வேறு நாட்டு ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வந்தன. ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் வெற்றிக்கரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது இந்திய கடற்படைக்கு தேவையான தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎம்எஸ் - 03 செயற்கைக் கோள், மோடி
PT HEADLINES |உலகக் கோப்பையை வென்ற இந்தியா முதல் S.I.R. க்கு எதிரான விஜய் அறிக்கை வரை!

பிரதமர் மோடி வாழ்த்து;

4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்03 செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ள நிலையில், இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “ நமது விண்வெளித் துறை தொடர்ந்து நம்மை பெருமைப்படுத்துகிறது! இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளான CMS-03 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். நமது விண்வெளி விஞ்ஞானிகளால் இயக்கப்படும் நமது விண்வெளித் துறை, சிறப்பிற்கும் புதுமைக்கும் ஒத்ததாக மாறியுள்ளது பாராட்டத்தக்கது. இஸ்ரோவின் வெற்றிகள் தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்தி எண்ணற்ற உயிர்களின் மேம்பாட்டிற்கு உதவியுள்ளது.” என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com