vijay, world cup winning indian cricket team
vijay, world cup winning indian cricket team pt web

PT HEADLINES |உலகக் கோப்பையை வென்ற இந்தியா முதல் S.I.R. க்கு எதிரான விஜய் அறிக்கை வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்திகளில், உலகக் கோப்பையை வென்ற இந்தியா முதல் S.I.R. க்கு எதிரான விஜய் அறிக்கை வரை பார்க்கலாம்.
Published on
  • மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இறுதிப் போட்டியில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஜொலித்த ஷஃபாலி வர்மா அணியின் வெற்றிக்கு வித்திட்டதால் ஆட்டநாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, தொடர் முழுவதும் சிறப்பாகச் செயல்பட்ட தீப்தி ஷர்மா 'தொடர் நாயகி' விருதை வென்றார். மேலும், இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

  • கடற்படை, ராணுவப் பயன்பாட்டுக்கான செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3 ராக்கெட், சிஎம்எஸ்03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு.

  • குலசேகரப்பட்டினத்தில் இன்னும் 15 மாதங்களில் விண்வெளி ஏவுதளம் அமைக்கும் பணி நிறைவ்டையும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் புதிய தலைமுறைக்கு தகவல்.

  • பிகார் தேர்தலில் வன்முறைக்கு இடமில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் திட்டவட்டம். மொகமா தொகுதியில் பிரசாந்த் கிஷோர் கட்சி வேட்பாளர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கருத்து.

  • வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை நிறுத்திவைக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். தொடர்ந்து, மக்களின் வாக்குரிமையை பறித்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் எஸ்ஐஆர்... அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதவர்களும் ஜனநாயகத்தைக் காக்க முன்வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

  • குறுக்கு வழியில் வெற்றிபெற தேர்தல் ஆணையம் மூலம் பாஜக முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு. ஜனநாயகத்தின் ஆணிவேரை அறுக்க மத்திய அரசின் தூண்டுதல் பேரில் தேர்தல் ஆணையம் முயற்சிப்பதாக வைகோ கண்டனம்.

  • குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் எஸ்ஐஆர் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு... என்.ஆர்.சி. எனப்படும் குடியுரிமைப் பதிவேட்டை நடைமுறைப்படுத்த முயற்சி நடப்பதாக கண்டனம்.

  • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை கண்காணித்து விவரங்களை தெரிவிக்க வேண்டும்... அதிமுக மாவட்டச் செயலர்களுக்கு எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தல்.

  • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம். எஸ்ஐஆருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என கேள்வி.

  • வங்கக்கடலில் உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணிப்பு.

  • பிகாரில் மின் கம்பியில் துணி காயப்போடும் அளவுக்கு இருந்த மோசமான நிலைமையை மாற்றினோம்... தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு. தொடர்ந்து, பிரதமர் மோடியை அம்பானியும், அதானியும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்குகின்றனர்... பிஹார் தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி விமர்சனம்.

  • லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் எனவும் ஹிஸ்புல்லா நெருப்புடன் விளையாடுகிறது என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை.

  • ராஜஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த கோர சாலை விபத்தில் 15

    பேர் உயிரிழப்பு. பலோடி மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பேருந்து மோதியதில் பலர் படுகாயம்.

  • காஸாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. குண்டு சத்தத்தில் இருந்து எப்போது தீர்வு கிடைக்கும் என பாலஸ்தீன மக்கள் கண்ணீருடன் எதிர்பார்ப்பு.

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி... அதிரடியாக 49 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார் வாஷிங்டன் சுந்தர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com