\
CM Vijay to Attend Sonia Gandhi's Autobiography Launch Event
CM VijayANI

சோனியாகாந்தி சுயசரிதை வெளியீடு.. முதல்வர் விஜய் பங்கேற்பு!!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்பு.
Published on: 

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் சுயசரிதை புத்தகமான 'Belonging: A Journey of Love' உலகம் முழுவதும் கடந்த நவம்பர் 10-ம் தேதி வெளியாகியிருக்கிறது. 544 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை  'ஹார்பர் காலின்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தப்புத்தகத்தில், சோனியாகாந்தியின் குழந்தைப்பருவம், ராஜீவ்காந்தி உடனான காதல் மற்றும் திருமணம் மற்றும் அவசரநிலை காலக்கட்டத்தின் போதான மனநிலை, 2004-ல் மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை சம்பவங்களை குறித்து தொகுத்து எழுதியிருக்கிறார். வெளியிடப்பட்டதில் இருந்து தற்போது வரை இந்தப் புத்தகம் இந்தியாவில் மட்டும் 2 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Belonging: The Journey of Love
Belonging: The Journey of LovePTI

இந்தச்சூழலில் தான், இந்தப் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, இன்று தனி விமானம் மூலம், டெல்லி சென்ற முதல்வர் விஜய் சோனியாகாந்தியின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அவரை, எம்.பி. பிரியங்கா காந்தி வரவேற்ற நிலையில், அவருக்கு ராகுல்காந்திக்கு அருகில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்வர் விஜயுடன், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் என். ஆனந்த ஆகியோர் சென்றிருந்தனர்.

மேலும், இவ்விழாவில் கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஜார்கண்ட், இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

CM Vijay to Attend Sonia Gandhi's Autobiography Launch Event
நான் ஏன் பிரதமர் பதவியை ஏற்கவில்லை? - சோனியா காந்தியின் சுயசரிதை!