இடைத்தேர்தல் To இரண்டு முறை பிரதமர்! எங்கெல்லாம் போட்டியிட்டார் பிரதமர் மோடி?

மக்களவை தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் விவரம் வெளியான நிலையில், பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
மோடி
மோடிபுதிய தலைமுறை

இந்த நேரத்தில் இதுவரை அவர் போட்டியிட்ட தொகுதிகள் மற்றும் பெற்ற வாக்குகள் என்ன என்பதை ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம்.

பொதுச்செயலாளர் To திடீர் முதல்வர்

1995-களின் இறுதியில் பாஜகவில் மெல்லமெல்ல வளர்ந்துவந்த மோடி, கட்சியின் பொதுச்செயலாளர் ஆகி அரசியல் களத்தில் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கியபோது, குஜராத் மாநில அரசியலில் புகைச்சல் கிளம்பியது. தொடர்ந்து, இரண்டாவது முறையாக குஜராத் முதல்வரான கேசுபாய் பட்டேலுக்கு எதிராக கட்சிக்குள் கலகம் ஏற்பட்டபோது, அவரை மாற்றிவிட்டு மோடியை முதலமைச்சராக்கினார் அத்வானி.

2002-ல் முதலமைச்சராக பதவி ஏற்றபோது, மோடி சட்டமன்ற உறுப்பினராக இல்லாததால், அவருக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் ராஜ்கோட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வஜுபாய் பாலா. 12 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர், 10 ஆண்டு காலமாக பிரதமராக இருக்கும் மோடி, முதன்முதலாக சந்தித்த தேர்தல் என்றால் அது ராஜ்கோட் தொகுதிக்கான இடைத்தேர்தல்தான்.

ஆட்சியை கலைத்து முதல்வராக தேர்வு!

ராஜ்கோட் தொகுதியில் போட்டியிட்ட மோடி, அதில் வென்று முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொண்டார். அப்போது, ராஜ்கோட் தொகுதியில் அவர் வாங்கிய வாக்குகள் சுமார் 45 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு மோடி பதவி விலக வேண்டும் என்ற பேச்சு வலுவானபோது, ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார் மோடி. மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட அவர், சுமார் 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

கட்சியும் வெற்றிபெற, மக்களின் அங்கீகாரத்தோடு முதலமைச்சர் ஆனார் மோடி. தொடர்ந்து, 2007 மற்றும் 2012 தேர்தல்களிலும் அதே தொகுதியில் போட்டியிட்ட மோடி, முறையே 1 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்று முதல்வர் பதவியை தன்னுடனே வைத்துக்கொண்டார்.

மோடி
அரியலூர்: புறா பிடிக்கச் சென்று 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்; பத்திரமாக மீட்பு...!

CM - PM

அதுதொடர்ந்து, 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் மாநிலம் வதோத்ரா மற்றும் உத்தரப்பிரதேச மாநில வாரணாசி தொகுதிகளில் போட்டியிட்ட அவர், ஐந்தரை லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டு இடங்களிலுமே வெற்றிபெற்றார். வதோத்ரா தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வாரணாசி தொகுதியில் இருந்து இந்தியாவின் பிரதமராகவும் மகுடம் சூடினார் மோடி.

5 ஆண்டு ஆட்சி முடிந்து மீண்டும் 2019ம் ஆண்டு தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2வது முறையாக மோடி பிரதமர் ஆகும்போது, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் இருந்தது.

மோடி
மதுரை: குடும்பத் தகராறில் கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு... பறிபோன 4 உயிர்கள் - நடந்தது என்ன?

தோல்வியையே பார்க்காத மோடி!

இதற்கிடையே, மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்த பிரதமர் மோடி, அதே மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். ராமர் கோயில் திறப்பு போன்ற உத்திகள் அவருக்கு வெற்றியை பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ விமர்சனம் தொடங்கி, பல விமர்சனங்கள் இருந்தாலும், 2002-ம் ஆண்டு தொடங்கி இதுவரை சந்தித்த எந்த தேர்தலிலும் வெற்றியை தவறவிடாமல் கையிலேயே பிடித்து வைத்து வருகிறார் பிரதமர் மோடி.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com