“அன்பு சகோதரர் ராகுல்காந்திக்கு...” - ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி
மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்திட்விட்டர் | @mkstalin

டெல்லியில் நேற்று நடைபெற்ற I.N.D.I.A. கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்திதேர்வு செய்யப்பட்டார். முன்னதாக மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ராய்பரேலி, கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு ராகுல் வென்றிருந்தார். பின்னர் வயநாடு தொகுதி எம்.பி.பதவியை ராஜினாமா செய்த நிலையில் ராய்பரேலி எம்.பி.யாக ராகுல் தொடர்கிறார்.

மு.க.ஸ்டாலின் - ராகுல் காந்தி
கல்வராயன் மலை: 2200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல்காந்தி நேற்று பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், அவர் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையொட்டி ராகுல்காந்திக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“அன்பு சகோதரர் ராகுல்காந்தியை அவரது புதிய பதவிக்காக இந்தியா வரவேற்கிறது. அவரது குரல் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்” என குறிப்பிட்டுள்ளார். ராகுலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து முதலமைச்சர் எக்ஸ் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com