கல்வராயன் மலை: 2200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் 2,200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. தம்புரான்பட்டு, கழுகுமலைப் பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
கல்வராயன் மலை
கல்வராயன் மலைpt web

கல்வராயன் மலை கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை என மூன்று மாவட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த மலையில் கிட்டத்தட்ட 109 கிராமங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் உள்ளது. இப்படி மிகப்பெரிய மலையில் அடர்ந்த காடுகள் இருப்பதால், கள்ளச்சராயம் விற்பது, காய்ச்சுவது என்பது தொடர்கதையாகி இருக்கிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராய விவகாரத்தில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வாகனங்களே செல்லமுடியாத பகுதிகளில் கூட காவல்துறையினர் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்தான், தம்புரான்பட்டு, கழுகுமலை பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர்களையும் பிடித்தபின் இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது தெரிய வரும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com