உத்தராகண்ட்  மேகவெடிப்பு
உத்தராகண்ட் மேகவெடிப்புமுகநூல்

திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு.. பெரு வெள்ளத்தில் உத்தராகண்ட்!

தராலி கிராமமே உருக்குலைந்து காட்சியளிக்கிறது. உத்தரகாசி அருகே உள்ள தாராலியில் திடீரென மேகவெடிப்பு நேரிட்டதால் குறுகிய நேரத்தில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது.
Published on

உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக நேரிட்ட பெரு வெள்ளத்தால் ஏராளமான கட்டங்கள் அடித்து செல்லப்பட்டன.

தராலி கிராமமே உருக்குலைந்து காட்சியளிக்கிறது. உத்தரகாசி அருகே உள்ள தாராலியில் திடீரென மேகவெடிப்பு நேரிட்டதால் குறுகிய நேரத்தில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது. இதேபோல் சுகி டாப் பகுதியிலும் மேக வெடிப்பால் பெரு மழை பெய்தது. இதனால் தாராலி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெரும் வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.

உத்தராகண்ட்  மேகவெடிப்பு
HEADLINES|உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு முதல் டிரம்ப் எச்சரிக்கை வரை!

குறிப்பாக சந்தைப்பகுதி முற்றிலும் சேதமுற்றது. குறிப்பாக, ஆற்றங்கரையை ஒட்டி இருந்த 25 தங்கும் விடுதிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. கீர் கங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள், கடைகள், சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. ஹர்ஷில் பகுதியில் உள்ள ராணுவ முகாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அங்கிருந்த 11 ராணுவ வீரர்களின் கதி என்ன என தெரியவில்லை. இதற்கிடையே, நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 130க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com