HEADLINES|உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு முதல் டிரம்ப் எச்சரிக்கை வரை!
உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையில், அடித்து செல்லப்பட்ட கட்டடங்கள். 4 பேர் உயிரிழப்பு மற்றும் 50க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்.
ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்.. இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்க உள்ளதாக எச்சரிக்கை..
அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா. உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா - ரஷ்யா இடையே நீடிக்கும் பதற்றம்.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலுக்கு இந்திய ராணுவம் மறுப்பு. சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை என்றும் விளக்கம்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம். தொழில் முதலீடுகளுக்கான நிர்வாக ஒப்புதல் மற்றும் ஆணவக் கொலைக்கு எதிரான சிறப்புச் சட்டம் குறித்து விவாதம்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமைச்சர்கள் காணாமல் போவார்கள் என பழனிசாமி விமர்சனம். விவசாயி என்பதால் தம்மை அமலாக்கத் துறை, வருவாய்த் துறை நெருங்க முடியவில்லை என்றும் பேச்சு.
14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தை எட்டியது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம். வேறு எந்த மாநிலமும் பெறாத அபரிமிதமான வளர்ச்சி என அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்.
கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க மசோதா. பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..
ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவிப்பு.
சிவகங்கை, அருப்புக்கோட்டை, திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை. தொடர் மழையால் பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்வு.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. சென்னையில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
ஆம்பூரில் திருமண அழைப்பிதழ் வைப்பது போல் புர்கா அணிந்து சென்று நகை, பணம் கொள்ளை. உறவினர் வீட்டில் கைவரிசை காட்டியவர் கைது.
சிவகங்கை அருகே அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா. ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.
சென்னையில் பணி நிரந்தரம் கோரி 5ஆவது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம். பலரும் பணிக்கு செல்லாததால் ஏராளமான பகுதிகளில் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் தொய்வு.
கவின் கொலை வழக்கில் 8 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை நீதிமன்றம் உத்தரவு. வழக்கு விசாரணைக்காக ஆஜராக சுர்ஜித்தின் தாயாருக்கு சிபிசிஐடி சம்மன்.
ராமாயணத்தில் ராவணன் தலை வெட்டப்படும் போதெல்லாம் மீண்டும் முளைப்பதுபோல் அந்தரங்க வீடியோக்கள் அதிகரிப்பு. இணையதளங்களில் அந்தரங்க வீடியோக்கள் அதிகரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை.