பொறுமையிழந்த பி.ஆர்.எஸ் வேட்பாளர்; பாஜக வேட்பாளரின் கழுத்தை பிடித்த சம்பவம்; தெலுங்கானாவில் பரபரப்பு

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின் போது பாரதிய ராஷ்டிரிய சமேதி கட்சி எம்.எல்.ஏ., பாஜக வேட்பாளரை சரமாரியாக தாக்கிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
தெலங்கானா
தெலங்கானாpt web

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 30 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 119 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்சிகளும் மாறி மாறி தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த வண்ணம் உள்ளனர். அதேவேளையில் மூன்று கட்சிகளும் பரபரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், ஐதராபாத் அடுத்த குத்புல்லாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிடையே விவாத நிகழ்ச்சியினை தனியார் தொலைக்காட்சி ஒன்று ஏற்பாடு செய்திருந்தது.

இதில் அத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், பி.ஆர்.எஸ். கட்சியின் வேட்பாளருமான கே.பி.விவேகானந்தா, பாஜக வேட்பாளர் கூனா ஸ்ரீசைலம், காங்கிரஸ் வேட்பாளர் அனுமந்த் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மூவரும் காரசாரமான விவாதித்துக் கொண்டிருந்த போது, பி.ஆர்.எஸ். மற்றும் பாஜக வேட்பாளர்கள் இடையே நிலம் பறிப்பு விவகாரம் தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது.

இருவரும் மாறி மாறி தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்த சூழலில் வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. பொறுமையிழந்த பி.ஆர்.எஸ். வேட்பாளர் பாஜக வேட்பாளரின் கழுத்தை பிடித்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்தது. இதனை அடுத்து தடுக்க வந்த தொண்டர்களும் மோதலில் ஈடுபடும் சூழல் ஏற்பட்டது. காவல்துறையினர் நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்றோர் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com