உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா?

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா?
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா?

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பெயரை எஸ்.ஏ.பாப்டே பரிந்துரைத்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது எஸ்.ஏ.பாப்டே உள்ளார். இவரது பதவி காலம் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பெயரை எஸ்.ஏ.பாப்டே பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு பாப்டே கடிதம் எழுதியுள்ளார்.


என்.வி.ரமணாவுக்கு வயது 64. இவர் ஆந்திரப்பிரதேச மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் பொன்னாவரம் என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். 1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி தமது வழக்கறிஞர் பணியை தொடங்கினார். நீதிபதி ரமணா, பி.எஸ்சி, பி.எல்., அரசியலமைப்பு, குற்றவியல், சேவை மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதி சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.

இவர் 2000-ஆம் ஆண்டு ஜூன் 27 முதல் 2013 செப்டம்பர் 1 ஆம் தேதி வரை ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி முதல், 2014, பிப்ரவரி 16 ஆம் தேதி வரை டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணி உயர்வு பெற்று பணியாற்றினார். அவர் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் மார்ச் 10, 2013 முதல் மே 20, 2013 வரை செயல்பட்டார்.

நீதிபதி ரமணா பிப்ரவரி 17, 2014 அன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் 2022 ஆகஸ்ட் 22 அன்று ஓய்வு பெற உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com