இந்திய எல்லையை ஒட்டிய ஏரியில் பாலம் கட்டும் சீனா

இந்திய எல்லையை ஒட்டிய ஏரியில் பாலம் கட்டும் சீனா

இந்திய எல்லையை ஒட்டிய ஏரியில் பாலம் கட்டும் சீனா
Published on

இந்திய எல்லையில் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வரும் சீனா, தற்போது எல்லையில் உள்ள ஏரியின் மீது பாலமும் கட்டுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்தியா - சீனா இடையே கடந்த 2020ஆம் ஆண்டு லடாக் பகுதி எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே எல்லையில் பதற்ற நிலை நீடித்து வருகிறது. இரு தரப்பும் எல்லை நெடுக தலா 50 ஆயிரம் வீரர்களை குவித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவை ஒட்டிய எல்லை பகுதியில் சாலைகள், குடியிருப்புகள், ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கான கட்டமைப்பு வசதிகளை சீனா அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவை ஒட்டிய பாங்காங் ஏரியின் இரு கரைகளை இணைக்கும் வகையில் அதன் மீது சீனா பாலத்தை கட்டி வருவது செயற்கைக்கோள் படங்களில் தெரியவந்துள்ளது.

ஏரியின் மீது பாலம் கட்டுவது மூலம் சீனா தனது படைகளையும் ஆயுதங்களையும் போர்க்காலங்களில் வேகமாக கொண்டு செல்ல முடியும். இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள பாங்காங் ஏரியில் மூன்றில் ஒரு பங்கு சீனாவின் வசமும் ஒரு பங்கு இந்தியா வசமும் உள்ளது. மலைப்பாங்கான எல்லையில் படைகளையும் ஆயுதங்களையும் விரைந்து கொண்டு செல்லும் வசதியை இந்தியா ஏற்கனவே பெற்றுள்ள நிலையில் சீனாவிடம் அந்த வசதி இல்லாமல் இருந்தது. இதனால் 2020ஆம் ஆண்டு நடந்த மோதலின் போது சீன படைகள் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது. தற்போது அக்குறையை சரி செய்யும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com