உ.பி.: “பாலியல் வழக்கைத் திரும்பப் பெறு” - மறுத்த சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

உத்தரப்பிரதேசத்தில் சிறுமி ஒருவர், பாலியல் வழக்கை வாபஸ் பெறாததையடுத்து, அவரைக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் கோடரியால் வெட்டிக் கொன்றுள்ளனர்.
மாதிரிப் படம்
மாதிரிப் படம்கோப்புப் படம்

உலகில் இன்னும் பெண்களுக்கான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பாலியல்ரீதியாகத் தாக்கப்படும் அவர்கள், அதற்குப் பிறகும் வழக்கு போன்றவற்றால் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். அப்படியான சம்பவம் ஒன்றுதான் தற்போது உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பவன் நிஷாத் என்ற இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து அந்தச் சிறுமி போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், அவரும் அவருடைய நண்பர்களும் சிறுமியிடம் வழக்கைத் திரும்பப் பெறுமாறு மிரட்டியுள்ளனர். ஆனால், அந்தச் சிறுமி வழக்கை வாபஸ் வாங்க மறுத்துள்ளார்.

இதையும் படிக்க: 16 பந்துகளில் 20 ரன் தேவை; ஆனாலும் தோனி செய்த மேஜிக்! வைரலாகும் Champions Trophy வின்னிங் மொமண்ட்ஸ்!

இந்த நிலையில், பவன் நிஷாத்தின் சகோதரரான அசோக் நிஷாத், சமீபத்தில் மற்றொரு கொலை வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளியே வந்துள்ளார். சகோதரர்கள் இருவரும் சேர்ந்து அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று வழக்கை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த சிறுமி வழக்கை வாபஸ் பெற முடியாது என பிடிவாதமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் வயல்வெளியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த அந்த சிறுமியை, சகோதரர்கள் இருவரும் சேர்ந்து கோடரியால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யதுள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள சகோதரர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க: "தோல்வியிலிருந்து பாடம் கற்பதுதான் உண்மையான வீரனுக்கு அழகு"-இந்திய அணி வீரர்களுக்கு கபில்தேவ் ஆறுதல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com