சத்தீஸ்கர்: வாக்குப்பதிவிற்கு நடுவே குண்டுவெடித்ததில் துணை ராணுவப்படை வீரர் காயம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவிற்கிடையே குண்டுவெடித்ததில் துணை ராணுவப்படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
சத்தீஸ்கர் தேர்தல்
சத்தீஸ்கர் தேர்தல்PTI

சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு, சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டன. அதன்படி, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று காலை முதல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் வாக்குப்பதிவிற்கிடையே குண்டுவெடித்ததில் துணை ராணுவப்படை வீரர் ஒருவர் காயமடைந்தார். சுக்மா மாவட்டத்தில் கொன்ட்டா சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட எலமகுண்டா பகுதியில் சிஆர்பிஎஃப் துணை ராணுவப் படையின் சிறப்பு பயிற்சி பெற்ற கோப்ரா பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் பதிக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் ஸ்ரீகாந்த் என்ற ஆய்வாளர் படுகாயமடைந்தார். IED வகை குண்டை பயன்படுத்தி நக்சலைட்டுகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: ஷகிப் செய்தது சரியா? தவிர்த்து இருக்கலாமா?.. விவாதத்தை கிளப்பிய மேத்யூஸின் ’Timed out’ விக்கெட்!

முன்னதாக நேற்று மாலையும் காங்கேர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கியது. இதில் தேர்தல் பணியாளர்கள் இருவரும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் காயமடைந்தனர்.

நாராயண்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பாஜக பிரமுகர் ஒருவரும் நக்சல் தாக்குதலில் உயிரிழந்தார். நக்சல் அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் வாக்குப்பதிவு நடப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள்... 2 முறை சாதனை படைத்த அமெரிக்க வீரர்! யார் இந்த ஜாஸ்கரன் மல்கோத்ரா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com