\
Chennai Tops Metro Cities in Rice and Essential Food Prices
விலைவாசி உயர்வுAi

இந்தியாவில் அத்தியாவசியப் பொருட்கள் விலை.. அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் சென்னை?

சென்னையில் அரிசி, கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வு குடும்பங்களின் செலவுகளை அதிகரிக்கச் செய்துள்ளது.
Published on: 

டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பிற முக்கிய நகரங்களை விடச் சென்னையில் அரிசி, கோதுமை மற்றும் சில அத்தியாவசியக் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்து குடும்ப பட்ஜெட்டைப் பாதித்துள்ளது. மத்திய நுகர்வோர் நலத்துறை தரவுகளின்படி புதன்கிழமை, அதாவது அக்டோபர் 28 அன்று சென்னையில் ஒரு கிலோ அரிசியின் விலை 80 ரூபாய். டெல்லியில் 47 ரூபாய்க்கும், மும்பையில் 44 ரூபாய்க்கும் கொல்கத்தாவில் 59 ரூபாய்க்கும் ஒரு கிலோ அரிசி விற்கப்படுகிறது. கோதுமை விலை சென்னயில் கிலோ 47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கோப்புபடம்
கோப்புபடம்AI

டெல்லி மற்றும் மும்பையில் முறையே 34 மற்றும் 44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு சென்னையில் கிலோ 42 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் டெல்லியில் 35 ரூபாய், மும்பையில் 48 ரூபாய் மற்றும் கொல்கத்தாவில் 39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்குச் சென்னையில் விற்கப்படுகிறது. அதே நேரம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை டெல்லி மற்றும் மும்பையில் 50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 70 ரூபாயாகவும் உள்ளது. சமையலில் அதிகளவில் பயன்படுத்தப்படும் தக்காளி சென்னையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் டெல்லியில் 37 ரூபாய்க்கும் மும்பையில் 24 ரூபாய்க்கும் கொல்கத்தாவில் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

சர்க்கரை, பருப்புகள் மற்றும் எண்ணெய்கள் ஆகியவற்றின் விலையோ மற்ற மூன்று நகரங்களைவிட சென்னையில் குறைவாக உள்ளது. காவிரி நீர் பற்றாக்குறையால் குறுவைச் சாகுபடி குறைந்ததாலும், அடுத்தடுத்த பருவங்களின் நிச்சயமின்மையாலும் வரத்து பாதிக்கப்பட்டதே சென்னையில் அரிசி விலை உயரக் காரணமாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து மற்றும் கூலிச் செலவுகள் அதிகரித்துள்ளதால் கோதுமை மற்றும் பிற பொருட்கள் விலை சென்னையில் அதிகரித்துள்ளது.

Chennai Tops Metro Cities in Rice and Essential Food Prices
டிசம்பரில் தங்கம் விலை என்ன? USA-வில் மிகப்பெரிய மாற்றம்!