\
Chennai Commercial LPG Cylinder Price Hiked by Rs 46, Reaches Rs 3,283
சிலிண்டர் விலை உயர்வுpt

வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை 46 ரூபாய் உயர்ந்து 3,283 ரூபாயாக அதிகரித்துள்ளது.
Published on
Summary

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சிலிண்டர் 46 ரூபாய் உயர்ந்து 3,283 ரூபாயாகியுள்ளது.

வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் கடந்த மாதத் தொடக்கத்தில் வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு
சமையல் எரிவாயுPt web

இதன்படி, சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை 46 ரூபாய் உயர்ந்து 3,283 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சிலிண்டர் விலை 4 முறை உயர்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்திருக்கிறது. அதேபோல, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றமின்றி 928.50 ரூபாயக தொடர்கிறது. தொடர்ச்சியான இந்த விலை உயர்வால் உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலாகும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Chennai Commercial LPG Cylinder Price Hiked by Rs 46, Reaches Rs 3,283
இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் ரூபாய்..? காரணம் இதுதான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com