சந்திரனின் சுற்று வட்டப் பாதையில் நுழைகிறது சந்திரயான்-2

சந்திரனின் சுற்று வட்டப் பாதையில் நுழைகிறது சந்திரயான்-2

சந்திரனின் சுற்று வட்டப் பாதையில் நுழைகிறது சந்திரயான்-2
Published on

சந்திரயான்-2 வரும் 20 ஆம் தேதி சந்திரனின் சுற்று வட்டப் பாதையில் நுழைந்துவிடும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. 

இந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு நிலவின் வட்டப்பாதையை சென்று அடையும் எனக் கூறப்பட்டது. அதன்படி தன் பயணத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் சந்திரயான்2, கடந்த 6ம் தேதி 5ஆவது மற்றும் இறுதி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான் -2 வரும் 20 ஆம் தேதி சந்திரனின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்துவிடும் என இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

சந்திரயான் 2ன் நிலைப்பாடு குறித்து தகவல் தெரிவித்த சிவன், சந்திரயான் 2, கடந்த 6ம் தேதி 5ஆவது மற்றும் இறுதி புவி வட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது. இது 14ம் தேதியான நாளை புவியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகத்தொடங்கும். அதன்படி சந்திரயான் -2 வரும் 20 ஆம் தேதி சந்திரனின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.

நிலவைச்‌ சுற்றத் தொடங்கியதும் சரியான இடத்தை தேர்வு செய்து, சந்திரயான்-2 நிலவில் இறங்கும். நிலவில் இறங்கும் சந்திரயான்-2க்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் இறங்கியவுடன் அது பூமிக்கு தனது சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கும். நிலவில் இறங்கிய பிறகு, விக்ரம் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ரோவர் எனப்படும் 6 சக்கர வண்டியான பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று, அதன் தன்மையை ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com