வழிமாறிய சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிக்காப்டர்; ஆந்திரத்தில் சில மணி நேரம் நீடித்த பதற்றம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடுpt web

ஆந்திர பிரதேசத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி செயல்படுகிறார். 2024 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலும் சேர்த்தே நடைபெறும். ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளும் 175 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை மதியம் விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு ஹெலிக்காப்டரில் சென்றார்.

அப்போது ஹெலிக்காப்டர் தனது பாதையில் இருந்து விலகியது. இதை கவனித்த விசாகப்பட்டினத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் அதிகாரிகள் விமானியை எச்சரித்த நிலையில் மீண்டும் விமானம் தனது பாதைக்கு திரும்பி அரக்கு பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

ஹெலிக்காப்டர் மலைப்பாங்கான பகுதிகள் வழியாக சென்ற போது விமானிக்கும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையே இருந்த தகவல் தொடர்பில் பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com