கல்வி கற்க வெளிநாடுகளுக்குச் செல்வதில் முதலிடம் பிடித்த சண்டிகர்
கல்வி கற்க வெளிநாடுகளுக்குச் செல்வதில் முதலிடம் பிடித்த சண்டிகர்முகநூல்

கல்வி கற்க வெளிநாடுகளுக்குச் செல்வதில் முதலிடம் பிடித்த சண்டிகர்!

யுடாய் (UIADAI) இடம் உள்ள மக்கள்தொகை கணக்கு மற்றும் மாநில கடவுச்சீட்டு அலுவலகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டு எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Published on

மாணவர்கள் கல்வி கற்க வெளிநாடுகளுக்குச் செல்வதில் இந்திய அளவில் சண்டிகர் முதலிடம் வகிக்கிறது.

யூனியன் பிரதேசமான சண்டிகரில் 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுவரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் ஒரு லட்சம் மாணவர்களில் சராசரியாக 10,146 பேர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். ஒரு லட்சத்துக்கு 869 மாணவர்கள் என்ற விகிதத்துடன் பஞ்சாப் இரண்டாம் இடமும் 851 மாணவர்களுடன் டெல்லி மூன்றாம் இடமும் வகிக்கின்றன.

கல்வி கற்க வெளிநாடுகளுக்குச் செல்வதில் முதலிடம் பிடித்த சண்டிகர்
PilotSuicide என எப்படி சொல்வீர்கள்? ஊகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டு.. விமர்சிக்கப்படும் அறிக்கை

லட்சத்துக்கு 524 மாணவர்கள் என்ற விகிதத்துடன் தென் மாநிலங்களில் ஆந்திர பிரதேசம் முதல் இடம் வகிக்கிறது. தமிழ்நாட்டில் இதே காலகட்டத்தில் லட்சத்துக்கு 211 மாணவர்கள் மட்டுமே வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். தெலங்கானாவில் லட்சத்துக்கு நான்கு மாணவர்கள் மட்டுமே வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர். யுடாய் (UIADAI) இடம் உள்ள மக்கள்தொகை கணக்கு மற்றும் மாநில கடவுச்சீட்டு அலுவலகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கடவுச்சீட்டு எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com