”இந்திய இறையாண்மையை பின்பற்றவில்லை” - மணிப்பூரில் 4 மெய்தி போராளி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை!

மணிப்பூரில் செயல்படும் மெய்தி போராளி அமைப்புகளான மக்கள் விடுதலை ராணுவம் (PLA) மற்றும் அதன் அரசியல் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் 5 ஆண்டுகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தடை உத்தரவு
மத்திய அரசின் தடை உத்தரவுட்விட்டர்

குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. அதிலும், மணிப்பூர் வன்முறையின்போது பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வீடியோவாக வெளியான செய்தி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்PTI

எனினும் அந்த வன்முறை இன்னும் அணையாமல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இருபக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் குக்கி இன பழங்குடியின மக்களுக்கு அதிக அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டன. 170க்கும் அதிகமானோர் இந்த கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க: மழை தொடர்பாக 7 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

இந்த நிலையில், மணிப்பூரில் செயல்படும் மெய்தி போராளி அமைப்புகளான மக்கள் விடுதலை ராணுவம் (PLA) மற்றும் அதன் அரசியல் பிரிவு, புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), மணிப்பூர் மக்கள் இராணும் ஆகிய 4 அமைப்புகளை 5 வருடங்களுக்கு தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலே குறிப்பிட்ட மெய்தி போராளி இயக்கங்கள் ஐந்தாண்டுக் காலத்திற்கு சட்டவிரோதமானவை என்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றாத அமைப்புகள் என்பதாலும் நாட்டின் குடிமக்களையும் காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்யும் வகையில் ஈடுபடுவதாலும் குறிப்பிட்ட இயக்கங்கள் தடை செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் மாநில பாஜக அரசுகள் மெய்தி அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குக்கி இனக்குழுவினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: “விளையாட்டுல மதத்த கலந்து வச்சிருக்கீங்க.. குழந்தங்க மனசுல வெஷத்த..” - மிரட்டும் லால் சலாம் டீசர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com