“விளையாட்டுல மதத்த கலந்து வச்சிருக்கீங்க.. குழந்தங்க மனசுல வெஷத்த..” - மிரட்டும் லால் சலாம் டீசர்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 10.45 மணிக்கு லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
lal salaam teaser
lal salaam teaserpt web

கிரிக்கெட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இந்த திரைப்படத்தில் விக்ராந்த், , விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளார்.

Lal Salaam movie
Lal Salaam moviept desk

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 10.45 மணிக்கு லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்தும், அதில் மதத்தின் பெயரால் இரு தரப்பினரிடையே ஏற்படும் மோதலை கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதை டீசர் காட்டுகிறது.

படத்தில் ரஜினியின் தோற்றம் சிறப்பாக இருக்கிறது. அதேபோல், “விளையாட்டுல மதத்த கலந்து வச்சிருக்கீங்க.. குழந்தங்க மனசுல கூட வெஷத்த வெதச்சிருக்கீங்க..” என்று ரஜினி பேசும் வசனம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. படம் ரொம்பவும் இண்டென்ஸ் ஆக இருப்பதுபோல் தெரிகிறது.

பொங்கல் பண்டிகைக்கு லால் சலாம் வெளியாவுள்ளது. ஏற்கனவே பொங்கல் ரேஸில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் இருக்கின்றன. லால் சலாம் பொங்கல் பண்டிகையில் வெளியானாலும் முன்னணி படமாக அமையுமா என்பது கேள்வியாக இருந்தது. ஆனால், இந்த டீசர் நாங்களும் ரேஸில் இருக்கிறோம் ஸ்கிரீன்களை ஒதுக்கி வையுங்கள் என்று சொல்வதைப் போல் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com