Central Govt Considering Restrictions on Social Media Use for Minors
model imagemeta ai

சிறார் சமூக வலைதளம் பயன்படுத்த கட்டுப்பாடு? மத்திய அரசு பரிசீலிப்பதாக தகவல்!

சமூக தளங்கள் பயன்படுத்த சிறுவர் சிறுமியருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

கடந்த வாரம் கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டார். அதேபோல், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யப்படும் என்று ஆந்திர முதல்வரும் என்.சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்திருந்தார்.

சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில், சமூக தளங்கள் பயன்படுத்த சிறுவர் சிறுமியருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை கொண்டுவர உள்ள நிலையில் நாடெங்கும் இது போன்ற கட்டுப்பாடுகளை அமலாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். சிறாருக்கு வயது அடிப்படையில் சமூகத்தள பயன்பாடு கட்டுப்பாடு கொண்டுவரப்படும் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசிவருவதாகவும் அவர் கூறினார். ஒருநாளைக்கு இவ்வளவு நேரம்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் யோசனை இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

Central Govt Considering Restrictions on Social Media Use for Minors
model imagemeta ai

முன்னதாக, சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த பல்வேறு நாடுகளும் தடை விதித்து வருகின்றன. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கு தடைவிதிப்பதற்கான சட்டத்தை அமல்படுத்தியது. இங்கிலாந்து, நார்வே, டென்மார்க், கிரீஸ், போலந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இதற்கான மசோதாவை கொண்டு வருவதாக அறிவித்துள்ளன. இதில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

Central Govt Considering Restrictions on Social Media Use for Minors
சிறுவர்கள் சமூக ஊடகம் பயன்படுத்தத் தடை.. ஸ்பெயினில் விரைவில் அமலாகும் சட்டம்!

இதற்கிடையே, கடந்த வாரம் கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு வெளியிட்டார். இந்தத் தடையை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. அதேபோல், 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யப்படும் என்று ஆந்திர முதல்வரும் என்.சந்திரபாபு நாயுடுவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான் சிறுவர் சிறுமியருக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Central Govt Considering Restrictions on Social Media Use for Minors
model imagemeta ai

நகர்ப்புற இந்திய பெற்றோரின் 2026 கணக்கெடுப்பின்படி, 49% குழந்தைகள் சமூக ஊடகங்கள், ஸ்ட்ரீமிங் அல்லது கேமிங்கில் தினமும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக செலவிடுவதாகக் கூறுகிறது. 22% பேர் ஆறு மணிநேரத்தைவிட அதிகமாக உள்ளனர் எனவும் ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த தளங்களுக்கு அடிமையாகி, அதிவேகத்தன்மை, பொறுமையின்மை மற்றும் குறைவான கவனக்குறைவை ஏற்படுத்துவதாகவும் பாதிக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தோராயமாக 70% பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் OTT வீடியோ தளங்களுக்கு அடிமையாகி இருப்பதாக நம்புகிறார்கள், அதே நேரத்தில் 64% பேர் சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையாகி இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.

Central Govt Considering Restrictions on Social Media Use for Minors
சிறாருக்கான சமூக ஊடகத் தடை.. தீவிரமாக்கும் உலக நாடுகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com