Global Curbs on Social Media for Children
குழந்தைகள் meta ai

சிறாருக்கான சமூக ஊடகத் தடை.. தீவிரமாக்கும் உலக நாடுகள்!

சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
Published on

சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடையை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடு ஆஸ்திரேலியா. இதற்கான சட்டம் நவம்பர் 2024இல் நிறைவேற்றப்பட்டது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு சுமார் 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். நார்வே சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 15ஆக உயர்த்த முடிவுசெய்துள்ளது. பிரான்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் வரும் ஆண்டுகளில் இதற்கான சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளன.

சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை
சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடைpt web

இந்தியாவில் 18 வயதுக்குட்பட்டவர்களின் தரவுகளைச் சேகரிக்கப் பெற்றோரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோவா போன்ற மாநிலங்கள் ஆஸ்திரேலிய மாதிரியைப் பின்பற்ற ஆலோசித்து வருகின்றன. அதிகப்படியான திரை நேரம் மனச்சோர்வையும் தூக்கமின்மையையும் உண்டாக்குவதுடன், சைபர் புல்லியிங் (Cyber Bullying) எனப்படும் இணைய வழித் துன்புறுத்தல்களுக்குச் சிறுவர்கள் எளிதில் இலக்காவதாக ஆய்வுகள் கூறுகின்றன. என்னதான் சட்டங்கள் இயற்றினாலும், பெற்றோரின் கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Global Curbs on Social Media for Children
குழந்தைகளை சமூக வலைதளங்கள் பயன்படுத்தாமல் தடுப்பது எந்தளவு சாத்தியம்? விளக்குகிறார் உளவியலாளர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com