ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளம் முடக்கம்.. மத்திய அரசு கொடுத்த பதில் இதுதான்!
சர்வதேச செய்தி முகமையான ராய்ட்டர்ஸின் (REUTERS) பிரதான எக்ஸ் தள கணக்கு, இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சட்டப்பூர்வ கோரிக்கை காரணமாக கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக, முடக்கப்பட்ட எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளையில், ராய்ட்டர்ஸ் முகமையின் பிற எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. "ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை நிறுத்தி வைப்பதற்கு இந்திய அரசுக்கு எந்த கட்டாயமும் இல்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாங்கள் X உடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்" என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், ”தடை குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசாங்கம் X நிறுவனத்திடம் கேட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்திடம் தடையை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே மாதம் நடந்த ’ஆபரேஷன் சிந்தூர்’ நிகழ்ச்சியின் போது, ராய்ட்டர்ஸ் எக்ஸ் கணக்கு மற்றும் பல கணக்குகளை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் சட்டப்பூர்வமாகக் கோரியதாக பிடிஐ செய்தி நிறுவன அறிக்கையின்படி மேற்கோள் காட்டப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. பல கணக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், ராய்ட்டர்ஸ் தொடர்ந்து அணுகக்கூடியதாகவே இருந்தது.
அதாவது, மே 7 அன்று (சிந்தூர் நடவடிக்கையின்போது) ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, ஆனால் அது அமல்படுத்தப்படவில்லை. X அந்த உத்தரவை இப்போது அமல்படுத்தியதாகத் தெரிகிறது, இது அவர்களின் தவறு. அதை விரைவில் தீர்க்க அரசாங்கம் X-ஐ அணுகியுள்ளது. அந்த வேண்டுகோளின்பேரில் சமூக ஊடக நிறுவனமான ராய்ட்டர்ஸ் இந்தியாவில் Xஐத் தடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை இப்போது பொருந்தாததால், தடையை நீக்குமாறு அரசாங்கம் X-ஐக் கேட்டுள்ளது.