\
cbse
cbsex page

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பில் மூன்றாம் மொழி கட்டாயம்.. தேர்ச்சி பெறுவது அவசியம்!

10ஆம் வகுப்பு தேர்வில் மூன்றாவது மொழியில் தேர்ச்சி அடைவதை கட்டாயம் ஆக்கி சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது..
Published on
Summary

சிபிஎஸ்இ புதிய சுற்றறிக்கையின்படி, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும். இது பொதுத் தேர்வாக அல்ல, பள்ளி அளவிலான அகமதிப்பீட்டுத் தேர்வாக நடத்தப்படும். அடுத்த கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு சான்றிதழ் பெற மூன்றாம் மொழி தேர்ச்சி அவசியம். தோல்வியடைந்தவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுக்கு முன் மறுதேர்வு வாய்ப்பு வழங்கப்படும்.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில் தேர்ச்சி அடைவதை சிபிஎஸ்இ கட்டாயம் ஆக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பொதுத் தேர்வாக இல்லாமல், பள்ளி அளவிலான அகமதிப்பீட்டுத் தேர்வாக எழுதி தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

CBSE
CBSEX

அடுத்த கல்வியாண்டு முதல், 10-ஆம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழைப் பெற மூன்றாவது மொழிக்கான பள்ளி அளவிலான தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். மூன்றாம் மொழிக்கான தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்.

ஒன்பதாம் வகுப்பில் மூன்றாம் மொழிக்கான பள்ளி அளவிலான தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் 10-ஆம் வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். ஆனால் அவர்கள், அதே கல்வி ஆண்டில் மற்தேர்வு எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். ஒன்பதாம் வகுப்புக்கு மூன்றாம் மொழி தேர்ச்சி விதி நடப்பு கல்வி ஆண்டு முதலே அமலாகிறது.

cbse
”6, 7 வயது சிறுவர்களால் ஆட்சியை இழந்தோம்” - திமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com