”9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கட்டாயம்” - சிபிஎஸ்இ சுற்றறிக்கை!
2026 ஜூலை 1-ம் தேதி முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 மொழிகள் கற்பதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கட்டாயமாக்கியுள்ளது. மேலும், இதுகுறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை (NEP) மற்றும் 2023-ஆம் ஆண்டின் பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF-SE) ஆகியவற்றிப் படி, மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகளாவது இந்தியாவின் பூர்வீக மொழிகளாக இருக்க வேண்டும் என்று வாரியம் குறிப்பிட்டுள்ளது. அதேசமயம், 10-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கு பொதுத் தேர்வு ஏதும் நடத்தப்படாது என்றும் மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் தனது தாய் மொழியான தமிழ் மொழியை தவிர்த்து இந்திய மொழிகளில் கூடுதலாக ஒரு மொழியிலேயே கட்டாயமாக இனி கற்க வேண்டும். அதேசயம், இரண்டு வெளிநாட்டு மொழிகளை கற்க வேண்டுமானால், நான்காவது மொழியாக படித்துக் கொள்ளலாம், ஆனால், இந்திய மொழிகளில் இரண்டில் ஒன்றை குறைத்துக் கொள்ள முடியாது.

