லக்னோ
லக்னோமுகநூல்

லக்னோ|சிபிஐ அலுவலகம் முன் அதிகாரியை வில் அம்பால் தாக்கிய நபர்... வெளியான அதிர்ச்சி பின்னணி!

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் சிபிஐ அலுவலகத்தில் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் மீது மர்ம நபர் ஒருவர் வில் அம்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

லக்னோ மாநிலம், ஹஸ்ரத்கஞ்சில் கடந்த வெள்ளிக்கிழமை (23.5.2025) அன்று, இந்த சம்பவம் நடந்துள்ளது. சிபி அலுவலகத்தில் முன் நின்றுகொண்டிருந்த அடையாளர் தெரியாத நபர் ஒருவர் திடீரென சிபிஐ அலுவலகத்துக்குள் புகுந்து வில், அம்பை கொண்டு தாக்குதல் நடத்தியதால், அங்கு பணியில் இருந்த பணியாளர்கள் அனைவரும் சிதறி அடித்து ஓடினர்.

அப்போது அலுவலக வாசலில் நின்றிருந்த உதவி காவல் ஆய்வாளர் ஏ.எஸ்.ஐ. விரேந்திர சிங் (55) மார்பகத்தில் அம்பு தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இவர் தற்போது ஏ.எஸ்.ஐ லக்னோவில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மேலும், அம்பு சுமார் ஐந்து சென் டி மீட்டர் ஆழம் வரை இறங்கியுள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி பின்னணி தெரியவந்துள்ளது.

காவல் அதிகாரியை தாக்கியதாக அடையாளம் காணப்பட்ட நபர் தினேஷ் முர்மு. இவர் ரெயில்வேயில் கேங்மேனாக பணிபுரிந்துள்ளார். இந்தநிலையில்தான், கடந்த 1993 ஆம் ஆண்டு ரயில்வேயில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்து வந்துள்ளார் அதிகாரி விரேந்திர சிங்.

accused Dinesh Murmu
accused Dinesh Murmu
லக்னோ
பெங்களூரு|கோவிட் தொற்று; 84 வயது முதியவர் பலி!

வழக்கின் முடிவில் தினேஷ் முர்மு, வேலையை இழந்துள்ளார். இந்தநிலையில்தான், பழிக்குபழி வாங்கும் விதாமாக, தற்போது லக்னோவில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வெளியில் வில் அம்புகளை கொண்டு தாக்கல் செய்துள்ளார். மேலும், இவர் தற்போது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தினேஷ் முர்மு கடந்த 2005ஆம் ஆண்டு சிபிஐ அதிகாரியை சந்திக்க டெல்லிக்கு சென்றார். அப்போது போலீசாரை தாக்கியதால் சிறைக்குச் சென்றார். 2015ஆம் அண்டு ஜான்பூர் ரெயில் நிலையத்தில் ஜிஆர்பி வீரரை தாக்கியதால் மூன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் விசாரணை நடத்திய அதிகாரியை தாக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com