பெங்களூரு ஐஐஎம் | சாதிய பாகுபாடு தொடர்பான புகார்.. 6 பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு!
பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனத்தில் சாதிய பாகுபாடு தொடர்பான புகாரில் 6 பேராசிரியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பெங்களூரு ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சாதிய பாகுபாடு நிகழ்வதாக குடியரசுத் தலைவருக்கு பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சாதிய பாகுபாடு நிகழ்வதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் அதன் இயக்குநர் உள்பட 6 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கர்நாடகா மாநில சமூக நலத்துறைக்கு சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகம் அறிக்கையின் வாயிலாக பரிந்துரைத்துள்ளது. பெங்களூரு ஐ.ஐ.எம்.இல் பட்டியலினம் மற்றும் பழங்குடியைச் சேர்ந்த ஊழியர்களுக்கான உரிமைகள் மற்றும் குறைகள் நிவர்த்திச் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டுகளை பெங்களூரு ஐஐஎம் நிர்வாகம்மறுத்துள்ளது.