பெங்களூரு: ரகசிய தகவலின் பேரில் நடைபெற்ற சோதனை - ரூ 24 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
மும்பையைச் சேர்ந்த ஜூலியட் என்ற பெண் போதைப்பொருள் கொண்டு வந்து ரோஸ்லைமுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். ரோஸ்லைம் கே.ஆர்.புரத்தில் கடையில் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார். தப்பியோடிய ஜூலியட்டை தேடி வருகின்றனர்.
முன்னதாக ஜூலியட் என்ற வெளிநாட்டுப் பெண் மும்பையில் இருந்து உணவு தானியங்களுடன், போதைப் பொருட்களை கொண்டு வந்து பெங்களூருவில் உள்ள நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் விற்பனை செய்து வந்துள்ளார்.
ரோஸ்லிம், இவரிடம் இருந்து போதைப்பொருள் பெற்று, கே.ஆர்.புரத்தில் உள்ள டி.சி.பாளையத்தில் உள்ள ஒரு கடையில் வைத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து ரகசிய தகவலின் பேரில் பெங்களூருவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடை அருகே மறைந்திருந்து பார்த்துள்ளனர். அப்போது ரோஸ்லிம் போதைப் பொருட்களை விற்பனை செய்த நிலையில், பெங்களூருவில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரோஸ்லிமை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் ரோஸ்லிமிடம் இருந்து 12 கிலோ வெள்ளை மற்றும் மஞ்சள் நிற MDMA படிகங்கள் மற்றும் 70 சிம்கார்டுகளை சிசிபி போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டெல்லியில் இருந்து போதை மருந்து கொண்டு வந்த ஜூலியட் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.