செயலிழந்த செயற்கைக்கோளை கடலில் விழவைத்த விஞ்ஞானிகள்

கார்டோசாட் 2 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்த நிலையில், விண்வெளி குப்பைகளை குறைக்கும் நோக்கத்தோடு செயற்கைக்கோளின் உயரத்தை குறைத்த இஸ்ரோ,பாகங்களை செயலிழக்க செய்து கார்டோசாட் 2 செயற்கைக்கோளை கடலில் விழச்செயததாக தெரிவித்துள்ளது.
கார்டோசாட் 2
கார்டோசாட் 2 இஸ்ரோ

கார்டோசாட் 2 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்த நிலையில், விண்வெளி குப்பைகளை குறைக்கும் நோக்கத்தோடு செயற்கைக்கோளின் உயரத்தை குறைத்த இஸ்ரோ,பாகங்களை செயலிழக்க செய்து கார்டோசாட் 2 செயற்கைக்கோளை கடலில் விழச்செயததாக தெரிவித்துள்ளது.

கார்டோசாட்-2 செயற்கைக்கோள் நகர்ப்புற திட்டமிடலுக்கான செயற்கைக்கோள் படங்களை வழங்குவதற்காக 2007-ஆம் ஆண்டு விண்ணிற்கு அனுப்பப்பட்டது. இந்த செயற்கைக்கோளின் புகைப்படம், விவரமான வரைபடம் தயாரிப்பதற்கும், பிற நிலப்பட வரைவியல் பணிகளைச் செய்வதற்கும், கிராமப் புற மற்றும் நகர கட்டுமான, மேம்பாட்டு திட்டங்களுக்கும், புவியியல் மற்றும் நில விவர அமைப்பிற்கும் பயன்படுத்தப்பட்டது.

கார்டோசாட் 2
விண்வெளியில் புதிய விண்மீன்களை உருவாக்கும் கிராப் நெபுலாவின் X கதிர் தரவுகள் சேகரித்த ’XPoSat’!

680 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 635 கிலோமீட்டர் உயரத்தில் துருவ சுற்றுவட்ட பாதையில் இயங்கியது.

கார்டோசாட் - 2 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிய உள்ள நிலையில் அதன் சுற்றுவட்ட பாதையின் உயரம் 130 கிலோ மீட்டருக்கு பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டுவரப்பட்டது. கார்டோசாட் - 2 செயற்கைக்கோளில் உள்ள எரிபொருள் உதவியுடன் பூமியின் வடிவண்டத்திற்குள் செயற்கைக்கோளின் பாதை குறைக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.

nasa

ஐக்கிய நாடுகளின் விதிகளுக்கு உட்பட்டு விண்வெளி குப்பையை குறைக்கும் வகையிலும் மற்ற செயற்கைக்கோளின் இயக்கங்களை பாதிக்காத வகையிலும், கார்டோசாட்-2 செயற்கைக்கோளின் சுற்றுவட்ட பாதையில் உயரத்தை குறைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி செயற்கைக்கோளின் பாகங்களை ஒவ்வொன்றாக செயல் இழக்க வைத்து அதன் பின் உயரம் குறைக்கப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்து வந்தது.

இந்நிலையில், கார்டோசாட்-2 செயற்கைக்கோள் செயலிழப்பு செய்யப்பட்ட நிலையில், வளிமண்டலத்தில் எரிந்து இந்திய பெருங்கடலில் விழுந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

குறிப்பு:

ஆயுட்காலம் முடிந்த செயற்கைக்கோள்கள் விண்வெளி குப்பைகளை ஏற்படுத்தும் நிலையில், சமீப காலமாக இஸ்ரோ இது போன்று செயற்கைக்கோள்களின் உயரத்தை குறைத்து செயல் இழக்க செய்து பின்னர் பாகங்களை கடலில் விழ செய்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com