இன்று மாலை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம்
மத்திய அமைச்சரவை கூட்டம்PT Web

மூன்றாவது முறையாக நேற்று பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்ட நிலையில் அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் மற்றும் 36 இணை அமைச்சர்கள் என 71 பேர் பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமைச்சரவையில் சரியான விகிதத்தில் இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளதாக பதவியேற்புக்கு பின் எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவை கூட்டம்
மூன்றாவது முறையாக பிரதமரானார் மோடி.. அமைச்சரவையில் யார் யார்? முன்னாள் முதல்வர்கள் எத்தனைபேர்?

புதிதாக பதவியேற்றுக்கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், மக்களின் முன்னேற்றத்துக்கு அயராது உழைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இந்நிலையில் இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் இல்லத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடி பதவியேற்பு விழா
பிரதமர் மோடி பதவியேற்பு விழா

இதில் யார் யாருக்கு எந்தந்த துறைகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. தங்களது சொத்துப்பட்டியலை சமர்ப்பிக்க புதிய அமைச்சர்களிடம் பிரதமர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com